Gita Dhyana Shlokam கீதா த்யான ஸ்லோகம் (ஸ்ரீமத் பகவத்கீதையின் சிறப்பையும், ஸ்ரீமந்நாராயணனின் மகிமையையும் விளக்கும் இந்த ஸ்லோகங்கள் மிகுந்த சொற்சுவையும், பொருட்சுவையும், அழகிய உருவகங்களும் கொண்டவை) 1. ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् । अद्वैतामृतवर्षिणीं भगवतीम्- अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्- गीते भवद्वेषिणीम् ॥ १॥ பகவான் நாராயணானால் பார்த்தனுக்கு போதிக்கப்பட்டவளும், மஹாபாரதத்தின் மத்தியில் பழம்பெரும் முனிவரான வியாஸரால் எழுதி அமைக்கப்பட்டவளும், அத்வைதம் என்னும் அம்ருதத்தைப் பொழிபவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், பிறவிப்பற்றை நீக்கச்செய்பவளுமான பகவத் கீதை என்னும் தாயே! உன்னையே த்யானிக்கிறேன். 2. नमोऽस्तु ते व्यास विशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र । येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः ॥ २॥ விசாலமான அறிவாற்றல் உள்ளவரும், மலர்ந்த தாமரையின் இதழ் போன்ற கண்களை உடையவரும், மஹா பாரத...